சீனாவில் பிரபல விழாக்களில் நாய் கறி திருவிழாவும் ஒன்று. இந்த விழாவுக்காக ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கம்.

நாய்கள் கொடூரமாக கொல்லப்படுவதற்கு விலங்குகள் நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக இந்தாண்டு முதல் நாய்கறி திருவிழாவுக்கு தடை விதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், சீன அரசு நாய் கறி திருவிழாவுக்கு தடை விதிக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.

இதையடுத்து சீனர்கள்  நாய் இறைச்சி திருவிழாவை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடினார்கள்.

இதற்காக ஏராளமான நாய்கள் அடித்து, அரைகுறை உயிருடன் பெரிய பெரிய பாத்திரங்களில் உள்ள நீரில் கொதிக்கவிடப்பட்டு  சூப் தயாரிக்கப்பட்டது.

நாய்களின் இறைச்சியில் இருந்து சூப் மட்டுமல்லாது, பல்வேறு சுவையான உணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டன.

இந்த விழாவில் பங்கேற்று, நாய் கறியை ருசி பார்க்க நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் விழா நடக்கும் பகுதியை  நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

சீனாவில் நாய் இறைச்சி உண்பதற்கு சட்டப்பூர்வமான தடை ஏதும் இல்லாத போதிலும், பல்வேறு விலங்கு நல அமைப்புகள் நாய் இறைச்சி உண்பதற்கு தடைக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றன.

1 கோடி முதல் 2 கோடி வரையிலான நாய்கள் ஆண்டு தோறும் சீனாவில் இறைச்சிக்காக கொல்லப்படுவதாக அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளது.