காணாமல் போகும் காணிக்கைகள்!


சென்னை

கோடிக்கணக்கில் பக்தர்களால் கோயில்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகள் எங்கே செல்கின்றன? அதிர வைக்கும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கோயிலுக்கும்,  மற்றும் அர்ச்சகர்களுக்கும் காணிக்கை இடுவதை வெகுகாலமாக வழக்கத்தில் கொண்டுள்ளனர்.  அவர்கள் அதை அளிப்பதின் காரணமே அது கோயிலின் பராமரிப்புக்கோ,  அல்லது வேறு ஏதும் நல்ல காரியங்களுக்கோ உபயோகப்படும் எனும் நல்லண்ணத்தினால் தான்,

கோயிலுக்கு செல்லும் ஒவ்வொருவரும்  பல நூற்றாண்டு காலமாக நன்கொடைகளை தாராளமாக அளித்து வருகின்றனர்.  பழைய காலங்களில் அரசர்கள் கோயிலில் சேரும் செல்வத்தை கொண்டு பல நலத்திட்டங்களை செய்துள்ளனர்.  அது மட்டும் அல்ல, அரசரும் அரசியும் போட்டி போட்டுக்கொண்டு, தங்கம், வைரம், வைடூரியம் என காணிக்கை செலுத்துவார்கள்.

உதாரணமாக மன்னர் கிருஷ்ணதேவ ராயர் அளித்த பல வைர வைடூரியங்கள், மற்றும் பல பொருட்களை இன்றும் கர்நாடகாவில் உள்ள பல கோவிலில் விசேஷ பூஜைகளில் உபயோகப்படுத்துகிறார்கள்.

ஆனால் முடியாட்சி, குடியாட்சியாக மாறிய பின்பு கோயில்கள் பலஅரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ட்ரஸ்ட் மற்றும், கமிட்டிகளின் கீழ் வந்தது.  ஐம்பது, அறுபதுகளின் தொடக்கத்தில் இருந்த ட்ரஸ்ட்டிகள்,  கோயிலில் வரும் வருமானத்தை தங்கள் பொறுப்பில் வைத்திருந்தனர்.

அப்போது அர்ச்சகர்களின் ஊதியம் தடையின்றி தரப்பட்டது.   அவர்களின் குழந்தைகளுக்கு சமஸ்கிருதம், மந்திரங்கள், பூஜா விதிகள் போன்றவை கோயிலிலேயே போதிக்கப் பட்டு வந்தன.

ஆனால் எழுபதுகளில் இருந்து இந்த ட்ரஸ்ட்டுகள் கலைக்கப்பட்டு ஆலயங்கள் அனைத்தும் அரசின் அறநிலை யத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.  அரசியல் கட்சிகளின் கண்களை கோயில்களின் வருமானம் உறுத்தியது.

அரசியல்வாதிகள் கோயில்களின் கோடிக்கணக்கான வருமானத்தை தங்களுடையதாக்கிக் கொள்ள நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரசின் உதவியுடன் அந்த ட்ரஸ்ட்டுகள் கலைக்கப் பட்டதால், அறங்காவலர் என்னும் உருவில் உள்ளே நுழைந்தனர் அரசியல் வாதிகள்.  அர்ச்சகர்களின் சம்பளம் பல கோயில்களில் நிறுத்தப் பட்டு அவர்கள் தங்களின் தட்டில் விழும் பணத்தை மட்டுமே எதிர்பார்த்து வாழும் நிலைக்கு தள்ளப் பட்டனர்

கோவிலின் வருமானம் முழுவதும் அரசுக்கு சென்றாலும்,  அந்த கோயிலின் முன்னேற்றத்துக்கோ, அல்லது அங்கு வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு நலத்திட்டமோ நிறைவேற்றப் படவில்லை.  அரசுக்கு சென்ற பணம் மாயமானது.

உதாரணத்துக்கு கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் வருட வருமானம் 2014-15 வருடத்தில் 31 கோடிக்கு மேல் ஆனால் செலவோ வெறும் 68510 மட்டுமே,  இது 2015-16ல் 39 கோடி ஆனபோதும், 2016-17ல் 44 கோடி ஆன போதும் ரூ 68510 மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது

அதாவது கடந்த மூன்று ஆண்டுகளின் வருமானம் கிட்டத்தட்ட 114 கோடிக்கு மேல்,  ஆனால் செலவோ ரூ 2,05.530 மட்டுமே,  மிச்சமுள்ள பணம் எங்கு சென்றது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.  இது கர்நாடகாவின் நிலை.  தமிழகத்தில் இதுபோல எத்தனையோ?

 

 

கார்ட்டூன் கேலரி