புதிய உயர்கல்விச் சட்ட வரைவு: எடப்பாடி தலைமையில் ஆய்வு கூட்டம்

சென்னை:

த்திய அரசு அமல்படுத்த உயர்கல்விச் சட்டத்தின் முன்வடிவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு யுஜிசிக்கு பதிலாக  இந்திய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி,  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை புதிய சட்ட முன்வடிவை தயார் செய்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசுகள், கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள்  தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில்,  இந்திய உயர்கல்விச் சட்டம் 2018-ஆம் ஆண்டின் வரைவு சட்ட முன்வடிவு குறித்து தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில்,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார்,  தலைமைச் செலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.