கனவு தகர்ந்தது: பதக்கத்தை தவறவிட்டார் பிந்த்ரா!

ரியோ டி ஜெனிரோ:

ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டார் பிந்த்ரா. இதன் காரணமாக இந்தியர்களின் பதக்க கனவு தகர்ந்தது.

இந்தியாவின் தங்கமகன் அபிநவ் பிந்த்ரா நேற்றைய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதன் காரணமாக அவர் பதக்கம்  வெல்வார் என இந்திய மக்களிடைய எதிர்பார்ப்பு இருந்தது.

அபிநவ் பிந்த்ரா
அபிநவ் பிந்த்ரா

ஆனால் துரதிருஷ்டவசமாக, இன்று நடைபெற்ற 10மீ துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றில் அபிநவ் பிந்த்ரா  நான்காவது  இடத்தையே பிடிக்க முடிந்ததது. இதன் காரணமாக அவர் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார்.

இன்று நடைபெற்ற  இறுதிச்சுற்றில் 8 பேர் பங்கேற்றனர். போட்டியின் முடிவில் இத்தாலி வீரர்  நிக்கோலோ காம்பிரானி ( Niccolò Campriani)  206.1 புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்து  தங்கப் பதக்கம் வென்றார்.

உக்ரைன் வீரர் குளிஷ் ( Kulish)  204.6 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ரஷ்யா வீரர்  விளாடிமிர் மாஸ்லெனிகோவ் (Vladimir Maslennikov)  184.2 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

மூன்றாவது பதக்கமான, வெண்கலப் பதக்கத்திற்கு அபிநவ் பிந்த்ராவுக்கும், ரஷ்யா வீரர்  விளாடிமிர் மாஸ்லெனிகோவ்-க்கும் கடும் போட்டி நிலவியது. இதில் பிந்த்ரா 163.8 புள்ளிகள் எடுத்து  நான்காவது இடத்தை பிடிக்க முடிந்தது. இதன் காரணமாக பதக்கம் ஏதுமின்றி அபிநவ் பிந்த்ரா வெளியேறினார்.

பதக்கம் வெல்வார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் பதக்கம் இன்றி வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

ஏற்கனவே 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் அபிநவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்தவர் , ரியோ ஒலிம்பிக் தொடக்க விழாவின்போது   பிந்த்ரா தலைமையில் இந்திய வீரர்கள் அணிவகுத்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

      நேற்று நடைபெற்ற  ஒலிம்பிக்  ஹாக்கி  போட்டியில்,  இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியிடம் 2 – 1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.