பெற்ற குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த குடிகார தந்தை!

--

பெர்த்:

தன் மனைவி கண் முன்னே பெற்ற குழந்தையை தந்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்தவர் ஹெர்பர்ட். இவர் போதைப் பழக்கத்துக்கு அடிமையனவர்.

சம்பவத்தன்று பகல் முழுவதும் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். போதை உச்சத்துக்கு போக..  திடீரென தனது இரண்டு குழந்தைகள் மீதும் பெட்ரோல் ஊற்றியிருக்கிறார்.

இதைக்கண்டு அவரது மனைவி பதறிப்போய் தடுத்திருக்கிறார். ஆனால் அவரை தள்ளிவிட்டு, தனது ஏழு ஏழு மற்றும் மூன்று வயது குழந்தைகள் மீது நெருப்பு வைத்து கொளுத்தியிருக்கிறார் ஹெர்பர்ட்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் டேனியல் என்பவர் குழந்தைகளை மீட்டுள்ளார். முகம் மற்றும் உடல் முழுதும் காயமடைந்த குழந்தைகள்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன.

தகவல் தெரிந்து காவல்துறையினர் வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஹெர்பர்ட், “குழந்தைகள் மிக அழகாக உள்ளன. அதனால் கொளுத்தினேன்.  அது என் குழந்தைகளை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு” என்று உளறியிருக்கிறார்.

ஹெர்பர்ட்டை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.