முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணச் சலுகையை ரத்து செய்வதா? கனிமொழி கர்ஜனை…

சென்னை: பொதுமுடக்கம் தளர்வு காரணமாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ள தற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கொரோனா முடக்கம் தளர்வு காரணமாக, தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி,  தமிழகத்தில் கடந்த 7ந்தேதி முதல்  13 சிறப்பு ரயில்கள் இயக்க்கப்பட்டு வருகின்றன.  வரும் 12 ஆம் தேதி முதல் மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

ஆனால், இந்த சிறப்பு ரயில்களில், இதுவரை வழங்கப்பட்டு வந்த,   முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி, மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமான மற்றது. பொதுமுடக்கம் காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில்,

முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கபட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை.

என்று கர்ஜித்துள்ளார்.