சிம்லா :

மாச்சலபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி,  இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.

இமாச்சல பிரதேசத்தில் வரும் 9ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்று மாலை 5 மணி உடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது.

68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது.இங்கு காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறது. முதல்-மந்திரியாக உள்ள வீரபத்ரசிங் மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது. பிரேம்குமார் துமல் பாஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இமாச்சலபிரதேசத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்து,  நாளை மறுநாள் (9ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவுக்கான  ஏற்பாடுகளை  தேர்தல் கமி‌ஷன் செய்து வருகிறது.   அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இமாச்சலில்  தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை,  வாகன சோதனையில் ரூ.18 கோடி பணமும்,  ரூ.5 கோடி மதிப்புள்ள மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.