ஜெ. வீடியோ ஒளிபரப்பை நிறுத்த ஊடகங்களுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

சென்னை :

ஜெயலலிதா வீடியோவை டிவி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் ஒளிபரப்பு செய்வதை நிறுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

நாளை ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் வீடியோ ஒன்றை டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஜெ. சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஜெயலலிதா வீடியோ வெளியிடப்பட்டது விதிமீறல் என்றுகூறினார். மேலும்,  தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு வீடியோவை வெளியிட்டப்பட்டுள்ளது. இது விதிமீறல் தான்.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஒளிபரப்புவதை டிவி சேனல்களும், இணைய தளங்களும் நிறுத்த வேண்டும்.

வீடியோ வெளியிட்ட சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் அனைத்து ஊடகங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.