21சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்: திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை:

மிழகத்தில் காலியாக உள்ள  21சட்டமன்ற தொகுதிகளுக்கும் மொத்தமாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.  தமிழகத்தில் மொத்தம் 21 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகள் சம்பந்தமாக வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அங்கு தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தி ருந்தது. இது அரசியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடந்தது. தொகுதி வாரியாக பிரச்சார வியூகம், வாக்குச்சாவடி முகவர் நிலையில் இருந்து ஒவ்வொரு கட்டத் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை  குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் இணைந்து, இணக்கமாக பணியாற்றுவது தொடர்பாக பல ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, முன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்படாத நிலை யில் அது குறித்து உச்சநீதிமன்றத்தை அணுகலாமா தேர்தல் ஆணையத்தை அணுகலாமா என்பன உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் கருத்துக் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதன்பின்னர்,  மக்களவைத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடைபெறும்  18 தொகுதிகளுடன் மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் முடிவுக்கு வந்துவிட்டது. இரு தொகுதி தேர்தல் தொடர்பான வேறு வழக்குகளிலும், தேர்தலை நடத்தக் கூடாது என்று எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்பட வில்லை.

3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படாததற்கு கூறும் காரணங்கள் அடிப்படை ஆதாரமற்றது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் முறையிடப்படும் ன திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி