தமிழகத்தில் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும்: புதிய டிஜிபி அசுதோஷ் சுக்லா

சென்னை:

மிழகத்தில் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்று தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள  புதிய டிஜிபி அசுதோஷ் சுக்லா உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி அன்று ஒரே நாளில் நடைபெறுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு புதிய டிஜிபியும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள  சுதோஷ் சுக்லா இன்று பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது,  தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடைபெறும் என்று உறுதி அளித்தார்.

வாக்காளர்கள் பயமின்றி தங்களது வாக்குகளை  வாக்களிக்க வர வேண்டும்  என்றும், அவர்களின் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்டாது என்று கூறியவர்,   பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.