Random image

என்னை கைது செய்வதிலேயே அமலாக்கத்துறை குறியாக உள்ளது: கார்த்தி சிதம்பரம் அலறல்

டில்லி:

ர்செல் மேக்சிஸ் வழக்கில் ஏற்கனவே சிபிஐ-ல் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை முயற்சி எடுத்து வருகிறது.

இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள கார்த்தி சிதம்பரம்,  என்னை கைது செய்வதிலேயே அமலாக்கத்துறை குறியாக உள்ளது என்று கூறி உள்ளார்.

மேலும், தான்  6 முறை விசாரணைக்கு  நேரில் ஆஜராகி இருப்பதாகவும், இதுவரை  47 கேள்விகளுக்கு பதில் அளித்தும்  இருக்கிறேன். இருப்பபினும் எனது  ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது என்று கூறி உள்ளார்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனான கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அக்டோபர் மாதம்  8ந்தேதி வரை தடையை  நீட்டித்து டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. அதை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை சார்பில்,   மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுமீதான விசாரணையின்போது, இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளிக்க கூற, வழக்கை 17ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தான்  6 முறை அமலாக்கத்துறையின்  விசாரணைக்கு  நேரில் ஆஜராகி இருப்பதாகவும், இதுவரை  47 கேள்விகளுக்கு பதில் அளித்தும்  இருக்கிறேன். இருப்பபினும் எனது  ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.. என்னை கைது செய்வதிலேயே அமலாக்கத்துறை குறியாக உள்ளது என்று கூறி உள்ளார்.