டில்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை, அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, சிதம்பரத்தை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு சிதம்பரம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.

ஆனால், ஏற்க மறுத்த நீதிபதி, சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி  வழங்கினார். மேலும், மேலும் சிதம்பரத்துக்கு வீட்டில் சமைத்த உணவு மற்றும் மருந்து, வெஸ்டர்ன் டாய்லட் போன்ற கோரிக்கை களையும் ஏற்ற நீதிமன்றம், அவரை தனி செல் கொடுக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து சிபிஐ வழக்கில் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை வருகிற 24-ம் தேதி வரை நீட்டித்தும்  நீதிபதி  அஜய்குமார் குஹார் உத்தரவிட்டார்.