இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் நிச்சயதார்த்தம் இன்று திருப்பதியில் நடைபெற்றது

ல்லிக்கட்டு போராட்டத்தின்போது பிரபலமான ஹிப்ஹாப் ஆதி, மீசையை முறுக்கு என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்தார். அவரது நிச்சயதார்த்தம் இன்று திருப்பதியில் நடைபெற்றது.

இசை அமைப்பாளராகவும், பாடகராகவும் வலம்வந்த ஹிப்ஹாப் ஆதி, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் தமிழக மக்களிடையே பிரபலமானார்.

அதைத்தொடர்ந்து ஒருசில படங்களில் இசை அமைத்து வந்த அவர், ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு திருப்பதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவருக்கும், லக் ஷா என்ற பெண்ணும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிச்சயதார்த்த விழாவில் இரு தரப்பின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.