லண்டன்:

ஐக்கிய ஐரோப்பியாவில் உள்ள 5 நாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்ததை தொடர்ந்து அமெரிக்கர்கள் கட்டுப்பாடின்றி பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, க்ரோஷியா, சைப்ரஸ், போலாந்து, ரோமெனியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கட்டுப்பாடின்றி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள அந்நாடு அனுமதி மறுத்துள்ளது. அதனால் பரஸ்பர அடிப்படையில் அமெரிக்கர்கள் விசா இல்லாமல் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்திற்கு எதிராக ஐரோப்பியா நாடாளுமன்றம் வாக்கெடுப்பு மூலம் இதை அறிவித்துள்ளது.

ஐரோப்பிய தூதரகங்கள் இந்த மாற்றத்தை கொண்டு வரும் வகையில் புதிய பேராண்மை சட்டம் பிறப்பிக்கும் வரை இந்த உத்தரவு 2 மாதங்களுக்கு அமலில் இருக்கும். எனினும் 12 மாதங்களுக்கு அமெரிக்கர்கள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்து விசா பெற விண்ணப்பிக்க வேண்டும்.

பேராண்மை ஒப்பந்த கடமைகளை கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா கடைபிடிக்கவில்லை. அதன் மீது எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை ஐரோப்பிய தூதரகம் கண்டுபிடித்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பை மனித உரிமைகள் குழு கொண்டுவந்துள்ளது. இதற்கு நாடாளுமன்ற பொது அமர்வில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆஸ்திரேலியா, புருனே, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளும் தங்களது பேராண்மை ஒப்பந்த கடமைகளில் இருந்து தவறிவிட்டன. அதனால் இந்த நாடுகளுக்கு விசா தளர்வில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும். அமெரிக்கர்களுக்கு இரண்டு மாதம் விசா தளர்வு அளிக்க மறுப்பு தெரிவிக்கும் பொறுப்பு ஐரோப்பிய தூதரகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஐரோப்பிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பியா ஐக்கிய குழு ஆகியோர் பேராண்மை சட்டப்படி அனுமதி அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜார்ஜியா நாட்டை சேர்ந்தவர்கள் ஐக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய விசா நடைமுறைகளை தளர்வு செய்ய ஐரோப்பிய ஐக்கிய குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜார்ஜியா நாட்டினர் 90 முதல் 180 நாட்கள் வரை விசா இல்லாமல் ஐரோப்பிய ஐக்கிய நாடுகளில் தங்கியிருக்கலாம்.

‘‘இந்த முடிவு ஐக்கிய ஐரோப்பியாவையும், ஜார்ஜியா மக்களையும் நெருங்கி வரச் செய்துள்ளது. இதன் மூலம் சுற்றுலா, வர்த்தகம் பலப்படும். ஜார்ஜியா மறுசீரமைப்புக்கு இது உதவும்’’ என்று தேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் கார்மெலோ அபெலா தெரிவித்தார். அமெரிக்காவை போல் மின்னணு பயண அனுமதி முறையை அமல்படுத்த ஐக்கிய ஐரோப்பியா பரிசீலனை செய்து வருகிறது. ஆனால், இது பிரிட்டன் டூரிஸ்ட்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தும் நிலவுகிறது.