தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவி 4வது முறையாக நீட்டிப்பு

சென்னை:

மிழக சட்டமன்றத்தின் இன்று,  உள்ளாட்சி அமைப்புகளின்  தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில், தற்போது 4வது முறையாக தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு  அறிவிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து திமுக தாக்கல் செய்த வழக்கு காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த கோர்ட்டு தடை விதித்துள்ளது.

இந்த குறித்த வழக்கு மற்றும் விசாரணை காரணமாக கடந்த 18 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், உள்ளாட்சிகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம்  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்க அறிவுறுத்த நிலையில் வார்டு வரையறை பணிகள் முடிந்ததும், உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியது.

உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை அரசு எந்தவித அறிவிப்பும் வெளியாத நிலையில், உள்ளாட்சித்துறை தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று 4 ஆம் முறையாக பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில் உள்ளாட்சித்துறை தனி அதிகாரிகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை அல்லது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.