சென்னை உயர்நீதி மன்றத்துக்குள் நுழைந்த ‘போலி’ சிபிஐ அதிகாரி கைது

சென்னை:

யர்நீதிமன்ற வளாகத்தில் பிதமரின் பாதுகாப்பு அதிகாரி என்ற  போலி அடையாள அட்டையுடன் காரில் நுழைந்தவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள்  காரில் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த வழக்கறிஞர்கள் மீதும் வாகனங்கள் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கிருந்த வழக்கறிஞர்களை காரை மடக்கி  காரினுங்ள இருந்தவரை என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அவர் வந்த காரில் சிபிஐ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால், அவர் தனது பெயர் டாக்டர் பிரசாத் என்றும்,  தான் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என்று அடையாள அட்டையை காட்டினார். . இதனால் சந்தேகமடைந்த வழக்குரைஞர்கள் காரை சோதனை செய்தனர். அப்போது, பிரசாத் சிபிஐ அதிகாரி, சர்வதேச போலீஸ் அதிகாரி என்பது உள்ளிட்ட பல்வேறு போலி அடையாள அட்டைகள் வைத்திருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து, பிரசாத்தை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரின்  காரையும், போலி அடையாள அட்டைகளையும் பறிமுதல் செய்து அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது,  அந்த கார் தியாகராயநகரைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.