பிரபல ஒளிப்பதிவாளர் ராபர்ட் ஆசிர்வாதம் காலமானார்

சென்னை:

ல வெற்றிப்படங்களில் பணியாற்றி உள்ள இரட்டை ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ராபர்ட் ஆசிர்வாதம் உடல்நலமின்றி இன்று காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

ராபர்ட் ஆசிர்வாதம்

இவர் அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஆசிரியராக பணியாற்றிய ராபர்ட் ஆசிர்வாதம், சின்னபூவே மெல்ல பேசு, குடிசை, பாலைவனச்சோலை மற்றும் டி.ஆரின்  ஒரு தலை ராகம்.போன்ற படங்களில் தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.

1980ம் வருட காலக்கட்டங்களில், இரண்டு பேர் இணைந்து ஒளிப்பதிவு செய்தது மிகக்குறைவு. அப்போது, திரையுலகில் ஒளிப்பதிவுக்கென தனி அங்கீகாரத்தை  பெற்றவர்களான  ராபர்ட் ராஜசேகர் என இரண்டு பேர்  இணைந்து ஒளிப்பதிவு மற்றும் இயக்குனர்களாக  பணியாற்றி பல வெற்றிப்படங்கள் கொடுத்து சாதனை படைத்துள்ளனர்.

இந்த இரட்டையர்களுள் ஒருவரான ராபர்ட் ஆசிர்வாதம் இன்று காலமானார்.

கார்ட்டூன் கேலரி