கொரோனா பாதித்த நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை

நெல்லை:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட  நெல்லை ‘இருட்டுக்கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகப்புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா. அதன் உரிமையாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று   உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில்  உரிமையாளர்ளில் ஒருவரான  ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.