பிரபல நடிகைகளின் அண்ணன் மகள்  மாயம்!

சென்னை

முன்னாள் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி மற்றும் நகைச்சுவை நடிகை லலிதா குமாரியின் சகோதரர் அருண்மொழி வர்மன். இவரது மூத்த மகள் அப்ரீனா. 17 வயதான அவர், சர்ச் பார்க் கான்வென்டில் பிளஸ்2 படித்து வருகிறார்.

இவர்களது குடும்பம் சென்னை தி.நகரில் வசித்து வருகிறது. கடந்த 6ந்தேதி பள்ளிக்கு செல்வதாக சென்ற அப்ரீனா இதுவரை வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடமும், அப்ரீனாவின் நண்பர்களிடமும் விசாரித்ததில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அப்ரீனா காணாமல் போனது  குறித்து பாண்டிபஜார் காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் காணாமல்போய் 6 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அவர் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லலிதாகுமாரி, “சர்ச் பார்க் பள்ளியில் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த தகவல்களுக்கு சாதகமாக உள்ள இடங்களில் உள்ள  உள்ள கேமராக்கள் வேலை செய்யவில்லை. இதன் காரணமாக பள்ளி நிர்வாகத்திடம் இருந்து  போதுமான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.

மேலும், பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கும் போதிய ஆதாரங்கள் அளிக்காமல் மெத்தனம் காட்டுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மாயமான அப்ரீனா குறித்து தகவல் தெரிந்தால் 9176617337 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம்..