இயக்குநர் பாலாவுக்கு பிரபல எழுத்தாளர் கண்டனம்

நெட்டிசன்:

Pattukkottai Prabakar  முகநூல் பதிவு

ரு நபரை கேவலமாகத் திட்ட அவருடைய தாயின் ஒழுக்கத்தைக் கொச்சைப் படுத்தியும்.. பெண்களின் உடல் உறுப்பின் பெயருடன் முன் பின்னாக அசிங்கமான வார்த்தைகளைச் சேர்த்தும் திட்டுவது உலகம் முழுவதும் இருந்துவரும் தொடர்ந்தும் வரும் அநாகரிகம்.

அதை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா செய்ய வேண்டுமா? அதையும் கதாநாயகியைப் பேச வைத்து? அந்த ஒரே வார்த்தை மட்டுமே தன் ட்ரைலரில் வசனப் பகுதியாக வைத்து எதிர்மறை கவனம் ஈர்த்திருப்பது அவசியம்தானா?

இன்னும் சொல்லப்போனால் அந்த வார்த்தை சென்சார் விதிகளின்படி தடை செய்யப்பட்ட வார்த்தை. படத்தில் வரும்போது அந்த இடத்தில் ம்யூ்ட் செய்யப்படப் போகிறது.

கடலையை ரசித்து சாப்பிடும்போது நடுவில் ஒரு சொத்தைக் கடலையை சாப்பிடுவதைப் போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது அறம் போன்ற நல்ல படங்களுக்கு நடுவில் இந்த ட்ரைலரில் அந்த வார்த்தை!

Leave a Reply

Your email address will not be published.