பிரபல கர்நாடக இசை விமர்சகர் சாருகேசி காலமானார்

--

ர்நாடக இசை விமர்சகரும் எழுத்தாளருமான  சாருகேசி காலமானார். அவருக்கு வயது 80. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

கல்கி, விகடன், கலைமகள், தினமணி, தினமணிக் கதிர், தினமலர், குமுதம், துக்ளக், அமுதசுரபி, மஞ்சரி உள்பட பல்வேறு  இதழ்களிலும் இசை விமர்சனங்கள், கலை விமர்சனங்கள், கதைகள் எழுதியுள்ள  மூத்த எழுத்தாளுருமான சாருகேசி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்தார்.

சுமார் 60 வருடங்களாக  விமர்சனங்கள் எழுதி வரும் சாருகேசி  தன்னுடைய முதல் கட்டுரையை 1955ல் கண்ணன் இதழிற்காக எழுதினார். தன்னுடைய கதையை கல்கி இதழில் எழுதினார். இலக்கியம் மற்றும் இசையில் அதிக ஈடுபாடு உடையவர். இசைக்கலைஞர்களின் நிறை குறைகளை  சுட்டிக் காட்டுவது இவருடைய வழக்கம்.

இயல் இசை நாடகம் என்ற நூலை எழுதிய இவர், மூன்று ஆங்கில நூல்களை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

புற்றுநோயால் காலமான சாருகேசிக்கு எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர் கள் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அவரது இல்ல முகவரி: 3, அபிராமி அபார்ட்மென்ட்ஸ், எண் 18, அபிராமபுரம் முதல் தெரு, சென்னை 18.