டில்லி,

ந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் ராணுவத்தை குவித்து வருகிறது பாகிஸ்தான் அரசு.

மே 1ந்தேதியன்று இந்திய ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தினர், இரண்டு இந்திய வீரர்களை சுட்டுக்கொன்று, அவர்களின் உடலை சிதைத்தனர்.

இது இந்திய ராணுவத்தினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் நிலைகள்மீது அதிரடி தாக்குதல்கள் நடத்தி அழித்தனர்.

இதையடுத்து  எல்லைப்பகுதியில் பாகிஸ்தான்  அதிக ராணுவ வீரர்களை ‘ குவித்து வருகிறது. எல்லைப்பகுதியில் விமானதளங்களை தயார் நிலையில் வைக்கும்படி பாகிஸ்தான் ராணுவத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சியாசின் பகுதியில் பாக்., போர் விமானங்கள் சுற்றி வர அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய எல்லையை நோக்கி ஆயுதங்களையும், படைகளையும் பாக்., ராணுவம் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.  எல்லை கட்டுப்பாடு கோடு அருகே பாக்., வீரர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. போர் விமானங்கள், டாங்குகளை பாக்., ராணுவம் தயார் செய்வது போன்ற வீடியோவையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதில் தாக்குதலை நடத்த பாக்., தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்திய ராணுவமும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது.