”பெண் குழந்தைகள் கடவுளுக்கு சமம்” – விஜய் சேதுபதி

பெண் குழந்தைகள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். சென்னையில் 12வயது சிறுமி பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அனைவரிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து திரைத்துறையை சார்ந்த பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

vijay-sethupathy

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள பதிவில் பின்வருமாறு உருக்கமாக கூறியுள்ளார்.
“ இது போன்ற வன்கொடுமை பெண்களுக்கு நடந்தாலே தாங்க முடியாது. அதுவும் குழந்தைக்கு என்றால்……இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கொடூரமாக கொலை செய்தாலும் பத்தாதுனு தோணுது. தண்டனையை கடுமையாக்க வேண்டும். என் மனைவிடம் கூட நான் சொன்னேன், பெண் குழந்தளை பெற்ற பிறகு தான் காயப்போடும் துணிகள் கூட கலர்ஃபுல்லாக இருக்கிறது என்று”.

பெண்கள் இந்த பூமிக்கு சொந்தக்காரர்கள். நமது வாழ்க்கையை அவர்கள் தான் பிடித்து செல்கிறார்கள். வாழ்க்கையை சொல்லி தருவதும் அழகாக்குவதும் அவர்கள் தான். பெண் குழந்தைகள் சாமிக்கு சமம். அப்படி பட்டவர்களை சீரழிக்கும் குற்றவாளிகளை ஏன் உட்கார வைத்து பேசி கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. இதை ஏன் தள்ளிப்போடுகிறீங்க ? என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.