10ஆண்டு வங்கி கணக்கை தாக்கல் செய்: நிதிஅமைச்சர் ஜேட்லிமீது கெஜ்ரிவால் வழக்கு!

டில்லி,

த்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியின்  10 ஆண்டு வங்கிக் கணக்கை வெளியிட வேண்டும் என்று டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான  கெஜ்ரிவால் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே  டில்லி கிரிகெட் வாரியத்தில் நடைபெற்ற ஊழல்களில் தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்கு உள்ள தொடர்பை அம்பலப்படுத்து வோம் என ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்தி ருந்தார்.

அதைத் தொடர்ந்து  கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ  ரெய்டு நடத்தியது. அதைத்தொடர்ந்து புதிய சர்ச்சைகள் உருவாகின. கிரிக்கெட் வாரிய ஊழலில் ஜெட்லிக்கு தொடர்பான ஆவணங்களை எடுக்கத்தான் மத்திய அரசு ரெய்டு நாடகத்தை நடத்தியது என கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் அருண் ஜெட்லிக்கு உள்ள தொடர்பு குறித்து விரைவில் அம்பலப்படுத்துவோம் என ஆம் ஆத்மி தெரிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் அவருடைய குடும்பத்தினரின் பத்து ஆண்டுக் கால வங்கிக் கணக்குகளை வெளியிட வேண்டும் என்று கோரி டில்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நிதி அமைச்சர் அருண்ஜேட்லியின்  10 ஆண்டுகாள  வருமான வரி தாக்கல் செய்த ஆவணங்கள், மற்றும் நிதி ஆவணங்கள், வங்கி கணக்கு பரிவர்த்தனையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கோரியுள்ளார்.

இது டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.