‘நிசப்தம்’ என்ற தலைப்பை ‘சைலன்ஸ்’ என்று மாற்றியுள்ளது படக்குழு….!

--

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சைலன்ஸ்’.

தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியிட்டது படக்குழு.

ஆனால், ‘நிசப்தம்’ என்ற தலைப்பை ஏற்கனவே ஒருவர் வாங்கி வைத்துள்ளதால் இந்தத் தலைப்பில் தமிழில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

ஆகையால் தமிழிலும் ‘சைலன்ஸ்’ என்ற பெயரில் வெளியாகிறது.

கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது. இதன் ட்ரெய்லரை இன்று (செப்டம்பர் 21) விஜய் சேதுபதி வெளியிடவுள்ளார்.