கார்த்தியின் பிறந்த நாளுக்கு ‘சுல்தான்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட வேண்டாம் எனப் படக்குழு முடிவு….!

--

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நாளை (மே 25) பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

தற்போது கார்த்தி நடிப்பில் ‘சுல்தான்’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் எனப் பலரும் எதிர்பார்த்தார்கள்.

இந்தச் சமயத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கார்த்தியும் இதையே சொல்லியிருக்கிறார்.

ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன்தான் ‘சுல்தான்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளது படக்குழு.

You may have missed