Random image

தமிழகத்தில் ஜன.4ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகாது: தேர்தல் ஆணையர்

சென்னை:

மிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்  ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 4ந்தேதி வெளி யாகாது என்றும், வெளியாவதில் காலதாமதம் ஏற்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் நாள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஏற்கனவே வெளியான வரைவு வாக்காளர் பட்டியலின் படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடை பெற்ற வாக்காளர் சிறப்பு முகாமில் புதிதாக பெயர் சேர்க்க 13,73,000 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் 99,458 பேர் புதியதாக வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்துள்ள தாகவும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 8,696 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்றும், அதுபோல  பட்டியலில் உள்ள பெயர் நீக்கம், திருத்தம் மேற்கொள்ள 20,07,412 விண்ணப்பங்கள் வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் அதன் காரணமாக வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது, குறிப்பிட்ட ஜனவரி 4ந்தேதி வெளியாக வாய்ப்பில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும் பலர் ஒரே முகவரியில் வாக்காளர் அட்டை பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை ஆய்வு செய்து வருவதாகவும், இதில் ஏற்பட்டுள்ள பிழைகளை களைவது பெரும் சவாலாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே  வாக்காளர் பட்டியல் வெளியிட இயலவில்லை என்றார்.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருப்பதாகவும்,  ஜன.10 வரை அவகாசம்  கேட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ தெரிவித்து உள்ளார்.