2018 ஜனவரி 4ந்தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை:

டுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை கருத்தில்கொண்டு, 2018 ஜனவரி 4ந்தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த  அனைத்து அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி  சென்னை தலைமை செயலகத்தில் ‘அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுடன்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தின்போது,  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி, பூத் ஏஜெண்ட் நியமனம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி, தமிகம் முழுவதும்   நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

இறுதி வேட்பாளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதிதாக சேருபவர்களுக்காக  சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7, 14 போன்ற தேதிகளின் நடைபெற இருப்பதாகவும் கூறினார்.

இந்த ஆண்டு இதுவரை 5.72 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சம் வாக்காளர்கள் குறைவாக  இருப்பதாகவும், வரும் தேர்தல்களில்  வாக்குச்சாவடி எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2018 ஜனவரி 4ந்தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு, Said Tamil Nadu Chief Election Officer Satya Prasad Sahu, The final list of voters will be published On January4 2018
-=-