தமிழகத்தில் தயாரான முதல் பேட்டரி கார்! முதல்வர் இன்று தொடக்கம்

சென்னை:

சென்னை அருகே உள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட முதல் பேட்டரி கார் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

‘கோனா’ பேட்டரி கார்

தமிழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைப்பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தொழில் நிறுவனங்கள், அதன் அதிபர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஏராளமான தொழிற்நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

அப்போது, ஹுண்டாய் நிறுவனம் சுமார் ரூ.7000 கோடி செலவில் தமிழகத்தில் மின்சக்தியால் இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தொடங்கும் என அறிவிக்கப் பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ந்தேதி  ஹுண்டாய் நிறுவனத்தின் பேட்டரி கார் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது.

அதன்படி சென்னை அருகே ஸ்ரீபெரும்பத்தூரில்  ஹூண்டாய் நிறுவனத்தின் பேட்டரிகார் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது பேட்டரி கார்கள் தயாராகி விற்பனைக்கு தயாராகி உள்ளது.

முதன்முதலாக தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ள பேட்ட காருக்கு  “கோனா” என பெயரிடப்பட்டு உள்ளது.  இந்த பேட்டரி கார், 6 மணி நேரம் வீட்டில் சாரஜ் செய்தால் 350 கிலோ மீட்டர் வரை இயங்கும் திறனும்’, ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் 1 மணி நேரம் சார்ஜ் செய்தாலும் 350கிலோ மீட்டர் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த பேட்டரி கார் சேவையை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று  காலை தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார்…