வாஷிங்டன்,

மெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டு உலக மக்களிடயே பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில், அவர் அறிமுகப்படுத்திய ‘ட்ரம்ப் கேர்’ மருத்துவ காப்பீடு மசோதா கடைசி நேரத்தில் அமெரிக்க செனட்சபையில் வாபஸ் பெறப்பட்டது.

இது டிரம்பின் தோல்விக்கான அறிகுறி என்றும், இது  முதல் தோல்வி என்றும் விமர்சிக்கப்படுகிறது.

முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது, ‘ஒபாமா கேர்’ மருத்துவக் காப்பீடு திட்டம் அமல் செய்யப்பட்டது. இதை ரத்து செய்துவிட்டு டிரம்ப் கேர் என புதிய மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிமுகப்படுத்தினார்.

 

அதன்படி ‘ட்ரம்ப் கேர்’ மருத்துவக் காப்பீடு திட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதி நிதித்துவ சபையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சபையில் மொத்தம் 435 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 235 பேர் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள்.

‘ட்ரம்ப் கேர்’ மருத்துவக் காப்பீடு மசோ தாவை நிறைவேற்ற 215 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் மசோதா தொடர்பான விவாதத்தின்போது ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் மசோதா வுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்க வில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப், வாக்கெடுப்பு நடைபெறு வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, டிரம்பின் அறிவுரைப்படி மசோதாவை வாபஸ் பெறுவதாக சபாநாயகர் பால் ரயான் அறிவித்தார்.

டிரம்பின் தோல்வி ஆரம்பமாகி உள்ளது என்று ஜனநாயக கட்சியினர் கூறி உள்ளனர்.