பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் முதல் இந்து

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணம் பணி நடந்து வருகிறது. இம்ரான்கானின் பிடிஐ கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிந்து மாகாண தார்பார்கர் தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்து மதத்தை சேர்ந்த மகேஷ் மலானி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்ற தேசிய சபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற முதல் இந்து என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு தேசிய சபையில் நியமன எம்.பி.க்களாக மட்டுமே இந்துக்கள் இருந்துள்ளனர். முதன் முறையாக மகேஷ் மலானி தேர்தலில் வெற்றி பெற்று தேசிய சபைக்குள் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed