வன்னியர் நல வாரியத்தின் முதல் கூட்டம்: இன்று தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது

சென்னை:

மிழ்நாடு வன்னியகுல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானத்தை தமிழக அரசு கடந்த 5ந்தேதி (பிப்ரவரி 5,2019) நியமனம் செய்தது. அதைத் தொடர்ந்து, இன்று வன்னியர் நல வாரியத்தின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

சென்னையில் தலைமை செயலகத்தில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் நான்காவது மாடியில் வன்னியர் நல வாரியத்தின் முதல் கூட்டம் அதன் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானம் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் கீழ்காணும் தகவல்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

வன்னியர் நலவாரியத்தின் மூலம் வன்னியர் பெரும்பான்மையாக வாழும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் அரசு போட்டி தேர்வுகளை எழுத இலவச போட்டித்தேர்வு பயிற்சிமையம் அமைப்பது.

மாவட்டம் தோறும் ஒரு வன்னியர் திருமண மண்டபம் அமைத்து வருடா வருடம் பத்தாயிரம் வன்னியர் ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்.

தொழில் முனைவோர் வன்னியர் மாநாடுகளை நடத்துதல் தொழில் செய்ய கடனுதவி அளித்தல்.

வன்னியர் வங்கியை அமைத்து நலவாரியத்தின் சொத்துக்களை அதில் சேர்த்துவைத்து எக்காலத்திலும் யாரும் வன்னியர் நலவாரியத்தின் சொத்துக்களை விற்கவோ அல்லது வாங்கவோ கூடாது என்ற வகையில் அமைப்பது.

வன்னியர் பெரும்பான்மை வாழும்இரண்டு மாவட்டங்களில் இரண்டு பெரிய இலவச மருத்துவ மனையை அமைத்து அங்கு தரமான முறையில் எல்லாவிதமான அறுவைசிகிட்சைகளையும் இலவசமாக செய்து கொடுப்பது.

பெரிய அளவில் சென்னையில் பல்கலைக்கழகம் அமைத்து இலவச கல்வியை கொடுப்பது.

ஒரு பெரிய மருத்துவ பல்கலைக்கழகம் அமைத்து நல்ல திறமையான மருத்துவர்களை , செவிலியர்களை உருவாக்குவது

கலைத்துறை மற்றும் மீடியாவில் ஆர்வம் உள்ள மாணவர்கள் திறமையை கொண்டுவர அவர்களுக்கு ஊக்க சக்தியாக “ மீடியா சிட்டி” கொண்டுவருவது.

அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் சென்னை யில் “சோழர் சிட்டி” உருவாக்கி பழமையான ஆய்வுகள் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு ஆய்வுகள் வரை வரும்கால தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது

இது மட்டுமில்லாமல்  அரசியல் பொறம்போக்கு ஆட்களிடம் வன்னியர் நலவாரியத்தின் சொத்துக்கள் இருந்தால் அதை முறையாக எடுத்து நலவாரியத்திற்குள்ள கொண்டு வந்து இலவசகல்வி, இலவசமருத்துவம், தொழில் முனைவோர் இளைஞர்களை பயிற்சி மையங்களை உருவாக்குவது.

 

கார்ட்டூன் கேலரி