டில்லி,

ந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்புகளை ஜனவரி 4ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி உ.பி. மாநிலத்தில் 7 கட்டட்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று 6வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், 38 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.

மீதமுள்ள 22 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்ட தேர்தல் வருகின்ற 8-ந் தேதி  நடைபெற உள்ளது.

இன்று தேர்தல் நடைபெறும்  38 தொகுதிகளில் ஏழு பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 168 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

1,643 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 9.29 ஆண்கள் மற்றும் 9.74 பெண்கள் உள்பட மொத்தம் 19.03 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.