இத்தாலி: 

லகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருக்றது. இந்நிலையில் உலக மக்களை மகிழ்விக்கும் வகையில் நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இத்தாலியின் மொடோனா மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி, சிகிச்சை பெற்று வந்த 95 வயதான மூதாட்டி, முதன்முதலில் நோய்பாதிப்பில் இருந்து மீட்டு வீடு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 427 பேர் பலியாகி உள்ளனர். 4,000-க்கும் அதிகமானவர்கள்கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 2,978 லிருந்து 3,045 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,713 லிருந்து 41,000 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கையில் சீனாவை விட இத்தாலி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.