சென்னை:
புதிய குடியிருப்பின் முதல் விற்பனையின்போது நிலத்தின் பிரிக்கப்படாத பகுதிக்கு மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று  சார்-பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து,  பதிவுத் துறை தலைவர் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர் கள், சார்-பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஓர் அடுக்குமாடி கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு அதற்கான உரியஅமைப்பிடம் இருந்து முடிவுற்றதற் கான சான்றிதழ் (completion certificate) பெறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் ஒரு பகுதியின் பதிவுக்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டால், அந்த பகுதியின் முதல் பதிவாக இருக்கும் பட்சத்தில், நிலத்தின் பிரிக்கப்படாத பகுதி மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். கட்டிடத்தையும் சேர்த்து பதிவு செய்ய வற்புறுத்தக்கூடாது. அதேநேரம், கட்டுமான ஒப்பந்தத்தை தனியாக பதிவு செய்ய எவ்வித தடையும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.