சபர்மதி: குஜராத் மாநிலம் சபர்மதி ஆற்றுப்படுகையில் முதல் கடல்-விமான சேவை  பிரதமர் மோடி இன்று  தொடங்கி வைத்தார் தொடர்ந்து அதில் பயணம் செய்தார். இந்த விமான சேவையை தனியார் நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் இயக்குகிறது.

முதல்கட்டமாக, ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தின் கெவாடியாயில் உள்ள உள்ள ஒற்றுமை சிலை வரை (சர்தார் வல்லபாய் படேலின் 546 அடி உயர சிலை) இந்த விமானங்கள் இயக்கப்படுகிறது.   கெவாடியா சபர்மதி ஒவ்வொன்றிலும் ரூ.36 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டது. முனைய கட்டிடத்தின் பரப்பளவு 700 ச.மீட்டர்.

கேவடியாவில் உள்ள நீர் விமான நிலையம் மற்றும் கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலையையும் அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றுப் படுகையையும் இணைக்கும் வகையிலான கடல்-விமான சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் பயண நேரம் 4 மணி நேரம் 45 நிமிடங்களாக குறையும். ஒரு நாளைக்கு இந்த விமானம் 8 முறை இயக்கப்படும். 14 பயணிகள் வரை இந்த விமானத்தில் பயணிக்க முடியும். ஒரு நபருக்கு ரூ.4,800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி,  இதுவரை இல்லாத வகையில் கெவாடியாவில் அமைக்கப்படும் முதல் நீர் விமான நிலையம் இது. கடல் விமான சேவைகளில் இந்தியாவில் விமான பயணத்தில் ஒரு புது சகாப்தம் இது. பிராந்திய சுற்றுலாவிற்கு ஒரு புதிய பரிணாமம். வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் இதன் நோக்கம் என்றார் மோடி.

இறுதிகட்ட இணைப்பாக நீர் விமான நிலையங்களை அமைக்கும் தொடர் திட்டங்களின் கீழ் இவை அமைக்கப்பட்டுள்ளன.விமான ஓடுதளம் அல்லது ஓடு பாதை இல்லாத இடங்களில் உபயோகப்படுத்தும் வகையில் தண்ணீரிலிருந்து மேல் எழும் மற்றும் கீழே இறங்கும் வசதிகள் இந்த கடல் விமானங்களில் உள்ளது. இதன்மூலம் கரடுமுரடான சவாலான பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளை பிரதான விமான சேவைகளுடன் இணைக்கும் வகையிலும், விமான நிலையங்கள் மற்றும் ஓடுதளம் அமைக்கத் தேவைப்படும் செலவைக் குறைக்கும் வகையிலும் இந்த புதிய கடல்-விமான சேவை உதவிகரமாக இருக்கும்.

ஏரிகள், உப்பங்கழிகள், அணைகள் போன்ற நீர்நிலைகள், சரளைக் கற்கள், மற்றும் புற்களில் தரை இறங்கும் வசதி கொண்ட இந்த சிறிய இறகுகள் கொண்ட விமானங்களின் வாயிலாக பல்வேறு சுற்றுலா தலங்களையும் எளிதில் சென்று அடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, அந்த விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி கெவடியாவிலிருந்து சபர்மதி வரை   சீ பிளேன் விமானத்தில் பயணம் செய்தார்.