அமெரிக்கஅதிபர் தேர்தல்: நியூஹாம்ப்ஷையர் டிக்ஸ்வில்லேவில் நடைபெற்ற முதல்வாக்குப்பதிவில் ஜோபிடனுக்கு அமோக ஆதரவு…

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நடைபெற்று வருகிறது.  முதன்முதலாக வெர்மாண்ட் மாநிலத்தில் உள்ள நியூஹாம்ப்ஷையரில் உள்ள  டிக்ஸ்வில்லே  நாட்ச் (Dixville Notch, New Hampshire) கிராமத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த பகுதியில் பலர் உள்ள நிலையில் வாக்களிக்க தகுதியானர்கள் 5பேர் மட்டுமே உள்ளனர்.  அவர்கள் 5 பேரும் ஜனநாயக கட்சியைச்சேர்ந்த ஜோபைடனுக்கு தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர். இதன் காரணமாக, அதிபர் தேர்தலில் ஜோபிடன் வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது. முதல் வாக்குப்பதிவே ஜோபைடனுக்கு சாதகமாக உள்ளதால், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக வறப்படுகிறது.

1960 ஆம் ஆண்டில் நிக்சனுக்குப் பிறகு முதல் தடவையாக  ஜனாதிபதி வேட்பாளரான ஜோபைடன் டிக்ஸ்வில்லே நாச்சின் அனைத்து வாக்குகளையும் வென்றார்.  இது நாளை வர இருக்கும் தேர்தல் முடிவை முன்னிலைப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அமெரிக்கஅதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்புக்கும் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அமெரிக்க மக்கள் தத்தளித்துகொண்டிருக்கும் நிலயிலும், வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.  தேர்தல் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு இன்று (புதன்கிழமை)  நடைபெற்று வரும் நிலையில்,  சில மாகாணங்களில் வாக்குப்பதிவு கடந்த சில தினங்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது.‘

அதிபர் தேர்தலில் மொத்தம் 28 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.  இதுவரை இதில் 9 கோடிக்கும் அதிகமான மக்கள் அதிபர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இன்றைய நேரடி வாக்குப்பதிவில் சுமார் 5 அல்லது 6 கோடி பேர் வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஆறு மாகாணங்கள், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கக் கூடியவையாக உள்ளன. அரிசோனா, ஃபுளோரிடா, மிஷிகன், வடக்கு கரோலைனா, பெனிசில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவைதான் அந்த மாகாணங்கள். இந்த மாகாணங்களில் சிலவற்றில் சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசத்திலேயே கடந்த முறை அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை, இந்தகுறிப்பிட்ட மாகாணங்களில் ஜோபிடனுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது.

அதுபோல அதிபர் தேர்தலில்  வடக்கு கரோலைனாவின் வாக்குகள்  முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. இந்த மாகாணத்தில்  கருப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.  அமெரிக்காவில் சமீபத்திய கருப்பின இனவெறி தாக்குதல் சம்பவங்கள்,  குறிப்பாக, ஜார்ஜ் பிளாய்ட்  போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் கறுப்பினத்தவர்கள் மத்தியில் டிரம்ப் மீது ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. இதனால் கறுப்பினத்தவர்களில் பெரும்பாலான ஓட்டுகள் பிடெனுக்கு விழுவதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆளும் கட்சிக்கு பின்னடைவைத்தரலாம் என சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.இருந்தாலும் அங்கு தேர்தல் போட்டி மிகக்கடுமையாகவே உள்ளது.

இந்த நிலையில், நியூஹாம்ப்ஷையரில் உள்ள  டிக்ஸ்வில்லே  நாட்ச்  பகுதியில் இன்று நடைபெற்ற முதல் வாக்குப்பதிவில், வாக்களித்த 5 பேரும் ஜோபைடனுக்கு தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர். இதன் காரணமாக, அதிபர் தேர்தலில் ஜோபிடன் வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது.

அமெரிக்க அதிபர்  தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?

அமெரிக்க தேர்தல் நடைமுறையை பொறுத்த வரையில் அதிபரை மக்கள் நேரடியாக நேர்த்தெடுக்க மாட்டார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, மக்கள் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். தற்போது மொத்தம் 538 பிரதிநிதிகள் குழு உறுப்பினர் இருக்கிறார்கள். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி அடைய முடியும்.

எந்த வேட்பாளருக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கிறதோ, அவருக்குதான் அந்த மாகாணத்தின் மொத்த பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். உதாரணமாக, ஒரு மாகாணத்தில் வெற்றி பெரும் வாக்காளருக்கு 99% வாக்குகள் கிடைத்தாலும் அல்லது வெறும் 51% வாக்குகள் கிடைத்தாலும், அந்த மாகாணத்துக்கான மொத்த பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களின் வாக்குகள் அனைத்தும் வெற்றியாளருக்கே போய் சேரும்.

எனவே பெரிய மாகாணங்களில் யார் வெல்கிறார்களோ அவரே அதிபராக முடியும். மேலும், மக்களின் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரால் கூட, அதிபராக முடியும். இதன்படிதான், கடந்த தேர்தலில் அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.  2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை விட, சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாக பெற்ற டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறையும் இதே போன்ற ராசி டிரம்ப்புக்கு உதவினால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

அமெரிக்காவில் ஆறு மாகாணங்கள், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்க கூடியவையாக உள்ளன. அரிசோனா, புளோரிடா, மிட்சிகன், வடக்கு கரோலினா, பெனிசில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவைதான் அந்த மாகாணங்கள். இங்கு சிலவற்றில் சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசத்திலேயே கடந்த முறை அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இப்படிப்பட்ட சூழலில், அதிரடி நடவடிக்கைகளுக்கு சொந்தக்காரரான டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக மகுடம் சூடப் போகிறாரா அல்லது பிடென் வெற்றி பெற்று வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா என்பது இன்றைய வாக்குப்பதிவில் தெரிந்து விடும்.

வாக்குப்பதிவு முடிவுகள் அமெரிக்க நேரப்படி நாளை (4ம் தேதி) அதிகாலையில் தெரியவரும் என கூறப்படுகிறது.

தேர்தல் முடிவடைந்த பிறகு டிசம்பர் 14 ஆம் தேதி அமெரிக்க அதிபர், துணை அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்காளர் குழுவுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.

வாக்காளர்க்குழு தேர்தலுக்குப் பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதற்கான முடிவு ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டும்.

தேர்தலில் வெற்றி அடைந்த பிறகு உடனடியாக அவர்கள் அதிபராக பொறுப்பேற்க மாட்டார்கள். உதாரணமாக அதிபர் ட்ரம்பே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரின் அமைச்சரவை உள்ளிட்ட இலாகாகளில் எவ்வித மாற்றமும் இருக்காது.

ஆனால் எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றால் அவர் அதிபரான உடன் மேற்கொள்ளும் திட்டங்கள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக முடிவு எடுக்க கால அவகாசம் வழங்கப்படும்.

அதன்பிறகு ஜனவரி 20 ஆம் தேதி அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக்கொள்வார்கள்

புதிய அதிபர் பதவியேறுக்கொண்ட பிறகு முன்னாள் அதிபரின் பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் தேதி பிற்பகலுடன் முடிவு பெரும்.