முன்னாள் அமைச்சர் தம்பி மகள் மரணம்

 

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் உடன் பிறந்த தம்பி அர்ஜூனனின் மகள் வித்யா கோகுல். இவரது கணவர்  கோகுல் திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளராக  இருந்து வருகின்றார்.

கோவை கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரி நிர்வாக அறங்காவலராக வித்யா கோகுல்   இருந்துவந்தார்.

இந்த நிலையில் உடல் நிலை பாதிப்பு காரணமாக சில நாட்களுக்கு முன் வித்யா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு  வித்யா மரணமடைந்தார்.

வித்யாவின் தந்தை அர்ஜூனி சில வருடங்களுக்கு முன் கார் விபத்தில் மரணமடைந்தார். அன்று முதல் வித்யாவை தனது மகளாகவே பொங்கலூர் பழனிச்சாமி பாவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.