எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்? ஜனவரி இறுதியில் மதுரை வருகிறார் மோடி…

மதுரை:

னவரி மாத இறுதியில் பிரதமர் மோடி மதுரை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார் என கூறப்படுகிறது.

மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடி, முன்னதாக எய்ட்ஸ் மருத்துவ மனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதன்பிறகே பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற ஜனவரி மாதம் 24 அல்லது 27ம் தேதி பிரதமர் மோடி மதுரை வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பிரதமர் மோடி வருகையை கண்டித்து சென்னையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், டிவிட்டர் சமூக வலைதளத்திலும் #/Gobackmodi ஹேஸ்டேக்கும் டிரென்டிங்கானது.

இந்த நிலையில், மதுரையில் அமைய உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டி, அதன்மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்து விடலாம் என எண்ணி மோடி மதுரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: foundation stone ceremoney, january, Madurai AIIMS hospital, modi, Modi arrive, PM Modi, எய்ம்ஸ் மருத்துவமனை, பிரதமர் மோடி, பிரமாண்ட பொதுக்வட்டம், மதுரை, மதுரை வருகை
-=-