மார்ச் மாதத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு எடப்பாடி அடிக்கல்! விவரம்

சென்னை:

மிழகத்தில் புதிதாக தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா மார்ச் மாதத்தில் முதல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மேலும் 9 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்தியஅரசு, தமிழகத்துக்கு அனுமதி வழங்கிஉள்ளது. இதையடுத்து, அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மத்தியஅரசும், மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான முதல்கட்ட நிதியை ஒதுக்கி உள்ளது.

இந்த நிலையில், அமைக்கப்பட்ட உள்ள 9 புதிய  மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மார்ச் 1 முதல் 14ம் தேதி வரை  நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

 மார்ச் 1ம் தேதி  – ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மருத்துவக் கல்லூரிகள் 

மார்ச் 4 ம் தேதி – கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூர

மார்ச்  5-ம்தேதி . நாமக்கல் மருத்துவக் கல்லூரி மற்றும், கரூர், திண்டுக்கல் மருத்துவ கல்லூரிகள்

மார்ச் 7-ந்தேதி – நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி

மார்ச் 8ம் தேதி – திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி

மார்ச் 14-ம் தேதி -திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி

இந்த அடிக்கல்நாட்டு விழாவிற்காக தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Details !, The foundation stone laying ceremony of 9 new medical colleges in Tamilnadu in March
-=-