டில்லி:

நாட்டிலேயே தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுதான் கடந்த 5 ஆண்டுகளில் மிக மோசமாக இருந்தாக ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன.

தமிழகத்தை சேர்ந்த அதிமுகவின் 37 எம்.பி.க்களின் செயல்பாடுதான் படு மோசம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சி வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 5 ஆண்டில் நமது எம்.பிக்களின் செயல்பாடு எப்படி? என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 25 மாநிலங் களில், 24வது இடமான  கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தை பிடித்துள்ளனர் தமிழக எம்.பி.க்கள்.

இந்த கருத்துக்கணிப்பான  நாடு முழுவதும் உள்ள  25 மாநிலங்களில், மாநிலங்கள் தோறும் சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்டதாக சிவோட்டர்ஸ் நிறுவனம்தெரிவித்து உள்ளது.

எம்.பி. செயல்பாடு தொடர்பாக தமிழகத்தில் 27 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டதில்,  திருப்தியே இல்லை என்று 43 சதவீதம் பேரும், ஓரளவுக்கு திருப்தி என்று 18.2% பேரும், மற்றவர்கள்  எம்.பி.க்கள் குறித்து பேசவே மறுத்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வு முடிவில்,  நிகர திருப்தி என்ற அளவில் மைனஸ் 1.5 மார்க் எடுத்து தமிழக எம்.பிக்கள் 25 மாநிலங்களில்,  24-வது இடமான கடைசி இடத்துக்கு முந்தைய இடத்தை பிடித்து தமிழக்ததிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. இதில் சற்று ஆறுதல், நமக்கு பிறகு கடைசி இடம் பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கிடைத்துள்ளது.

சிவோட்டர் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், கேரள எம்.பி.க்களின் செயல்பாடு முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்கள் உள்ளன.

தமிழகத்தில், அதிமுகவிடம் 37 எம்.பி.க்கள் உள்பட, பாஜக, பொன்.ராதாகிருஷ்ணன், பாமக அன்புமணி ராமதாஸ்  ஆகிய 39 எம்.பிக்கள் இருந்தும், அவர்களால் தமிழகத்திற்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

இவர்களில் பெரும்பாலோர், தற்போது நடைபெற உள்ள  மீண்டும் வாய்ப்பு கேட்டு மக்களை சந்திக்க வருகின்றனர்… வெட்கமில்லா ஜென்மங்கள்….