கடைசி இடத்தை பிடித்த தமிழக முதல்வர் எடப்பாடி….! எதில் தெரியுமா?

டில்லி:

மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்கணிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடைசி இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இது தமிழகத்திற்கு பெரும் தலைகுனியையும் வெட்கேட்டையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுக அரசின் நிர்வாக லட்சம் அனைவரும் அறிந்தது. மோடி தலைமை யிலான மத்திய அரசு, தங்களது கைப்பாவையாக தமிழக அரசை கையில் வைத்துக்கொண்டு பொம்மை ஆட்சி நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்து  சிவோட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில்,  தமிழக முதல்வர் எடப்பாடி  பழனிசாமிக்கு கடைசி இடமும் , தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கு முதலிடமும் அளிக்கப்பட்டுள்ளது.

‘சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ்’ செய்தி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு மாநிலங்களிலும்  கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் பட்டியலில்  தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். சந்திரசேகரராவின்  நிர்வாகம், செயல்பாடு மனநிறைவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

2வது இடத்தை இமாச்சலப்பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் 2-வது இடத்தை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் , 4வது இடத்தை  டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் பிடித்துள்ளனர்.

கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி 5-வது இடத்திலும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் 6-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , புதுச்சேரி முதல்வர் நாராயனசாமி, , உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திரசிங் ராவத் ஆகயோரின் செயல்பாடுகள் மோசம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில், 42 சதவிகிதம்பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி யின் செயல்பாடு, நிர்வாகம் திருப்தியாக இல்லை என்றும், பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக செயல்படுவது அந்த கட்சிக்கு சிறப்பானதாக இருக்காது என்றும் தெரிவித்து உள்ளனர்.

அதுபோல,  மிகக்குறைந்த அளவு மனநிறைவு அளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் முதல்வர்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Edappadi palanisamy, last place of functions of Chief Ministers list, Tamil Nadu Chief Minister
-=-