முதல் டி20: இந்திய அணிக்கு 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுக்க இலக்கு

--

ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியில் இந்தியாவிற்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் எடுக்க இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

targer

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டி20 போட்டியில் விளையாடி வருகிறது. பிரிஸ்பைன் நகரில் தொடங்கிய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இடையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்தது.

இதனால், இந்திய அணிக்கு டக்வொர்த் லூவிஸ் முறையில் 17 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 2விக்கெட்டுகளையும், கலீல் மற்றும் பும்ப்ரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.