விண்ணில் பறக்கும் தங்கத்தின் விலை! சவரன் ரூ.32,800 ஆக உயர்வு

சென்னை:

மிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இன்றைய தங்கம் சவரன் ரூ.32,800 ஆக உயர்ந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் பணவீக்கம் காரணமாக தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. லாபகரமான முதலீடாக, சமானியர்கள் விரும்புவதால், தங்கத்தின்மீதான விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பொருளாதார மந்தநிலையால் மக்களிடையே பணத்தட்டுப்பாடு இருக்கும் நிலையில், விலையேற்றம் நீடிப்பதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,100 ஆக உள்ளது. நேற்று 4,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று, தங்கத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்துள்ளது. அதேபோல, நேற்று 32,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 244 ரூபாய் உயர்ந்து 32,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தைப் போலவே, தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 4,305 ரூபாயாக உள்ளது. நேற்று 4,276 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 34,208 ரூபாயிலிருந்து இன்று 34,440 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தூய தங்கத்தின் விலை 232 ரூபாய் உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,151 ஆகவும், டெல்லியில் ரூ.4,166 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,192 ஆகவும், ஐதராபாத்தில் ரூ.4,076 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,572 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,079 ஆகவும், ஒசூரில் ரூ.4,076 ஆகவும், கேரளாவில் ரூ.3,936 ஆகவும் இருக்கிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.52.40 லிருந்து இன்று ரூ.52.90 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 52,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.