Random image

கொல்கத்தாவில் பள்ளி மாணவர்களுக்கு குடை, மழை கோட் வழங்க அரசு முடிவு

கொல்கத்தா:

அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளிகளில் பல்வேறு சலுகைகளும், இலவசங்களும் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தேவைப்படும் சத்துணவு, புத்தகம், நோட்டு, பை, சீருடைகள், ஷூக்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்த வகையில் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா மாநகராட்சி மாணவ, மாணவியருக்கு இலவச குடை மற்றும் மழை கோட் ஆகியவற்றை வழங்க முடிவு செய்துள்ளது.

கோடை காலம் மற்றும் மழை காலத்தில் தங்குதடையின்றி மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதற்காக இத்தகைய புதிட்டத்தை மேற்கு வங்க அரசு தொடங்கவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 35 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று அம்மாநில கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.