ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பை தமிழக அரசு உறுதியாக அறிவிக்கவேண்டும்!: சீமான்

சென்னை,

“இயற்கை வளங்களையும் மக்களையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு வெளிப்படையாக எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர், “புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு செயல்படுத்த முனையும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் இயற்கை வளம் பாழாகும். மக்களுக்கு குடிக்க்கூட தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். இந்தத் திட்டத்தை அனைவரும் இணைந்து  தடுக்க வேண்டும்.

இதே திட்டத்தை புதுச்சேரியிலும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதை அம் மாநில முதல்வர் நாராயணசாமி கடுமையாக எதிர்த்துள்ளார். அது போன்ற ஒரு உறுதியான நிலைபாட்டை தமிழக அரசும் எடுக்க வேண்டும்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: The Government firmly declare opposition to hydrocarbon scheme!: Seeman, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பை தமிழக அரசு உறுதியாக அறிவிக்கவேண்டும்!: சீமான்
-=-