டெல்லி:

வ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. நாட்டில் உள்ள  ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம் என்றும் பிரதமர் மோடி, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“இந்தியாவில் கொரோனா தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்று கூறலாம். இருந்தாலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இதற்கிடையில் பிரதமர் மோடி இன்று அனைத்துக்கட்சிளைச் சேர்ந்த பாராளுமன்ற கட்சித்தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பேசிய மோடி, தற்போது நாடு சமுதாய அவசரநிலையில் உள்ளது கொரோனா மனித குல வரலாற்றுக்கே அச்சுறுத்தலாக உள்ள நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளது நாடு தற்போதுள்ள நிலையில் கடினமான முடிவுகளை எடுத்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியுள்ளது

ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகிறது என்று தெரிவித்தவர்,.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5000யைத் கடந்துள்ள நிலையில், ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கை திரும்பப் பெறும் முடிவு இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கொரோனா எதிரொலியாக, உலக நாடுகள் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும், இந்த சவாலை நாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நாட்டில் ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம் என்றும் என்று கூறியவர், ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது! எங்களுக்கு வேற வழி தெரியல என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மோடியின் இந்த பேச்சு, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவே  தெரிகிறது. இதனால் ஏப்ரல் இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

வரும் 11 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்திய பிறகு, இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடைபெற்ற  காணொளி காட்சி  உரையாடலில் காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சுதீப் பாண்டியோ பாத்யாய், சிவசேனாவின் சஞ்சய் ராவத், பிஜேடியின் பினாக்கி மிஸ்ரா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், சமாஜ்வாதி கட்சியின் மிதுன் ரெட்டி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பிரதமரிடம் பேசினர்.