டில்லி:

ருத்துவ சாதனங்களின் தரம் உறுதி செய்வதை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஐரோப்பிய ஒன்றியத்தில் சந்தைப்படுத்தப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சாதனங்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை அரசாங்கம் கைவிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரமற்ற மருத்துவ உபகரணங்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களின் தரத்தை உறுதி செய்வது அவசியம்: மருந்து உற்பத்தி ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி  மருத்துவ சாதனங்கள் தரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் இந்திய மருந்து உற்பத்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐபிசி) செயலர் ஜி.என்.சிங் கூறியிருந்தார்.

மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு உயிர் காக்கும் உபகரணங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி வருவதால்,  மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி மற்றும் தர நிர்ணயத்துக்கென 2017-இல் தனி சட்ட விதிகள் வகுக்கப்பட்டன. அதன் கீழ் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த வகையில், தரமான வகையிலும், பாதுகாப்பான வகையிலும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அதைத்தொடர்ந்து, நம்பகமான மருத்துவ சாதனங்கள்தான் பயன்பாட்டில் உள்ளன என்பதை உறுதிப்படுதும் நோக்கில், மருத்துவ சாதன உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் அனைவரும்,  மருத்துவ சாதனங்களின் தரத்தை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் சுகாதாரத்துறை மற்றும் மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு  (Drug Technical Advisory Board – DTAB), ஆய்வுகூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மருத்துவ சாதனங்களின் தரம் உறுதி செய்வதை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் சந்தைப்படுத்தப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சாதனங்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை அரசாங்கம் கைவிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை மூலம் மருத்துவ சாதனங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதால், ஒழுங்குமுறை சிக்கல்களை அகற்றவும், இந்தியாவில் மருத்துவ சாதனங்களின் கிடைப்பை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை  எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

முதற்கட்டமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகளாக அங்கீகரிக் கப்பட்டு விற்பனை செய்யப்படும் மருத்துவ சாதனங்களுக்கான மருத்துவ பரிசோதனைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை  முயல்கிறது மத்திய சுகாதார அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.