முதன்முதலாக மத்திய நிதிஅமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த ராகுல்காந்தி…

டெல்லி:

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள நிதி உதவித் தொகுப்பின், மத்தியஅரசு சரியான திசையில் செல்ல தொடங்கி உள்ளதின் முதல்படி என்று ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

ராகுல்காந்தி முதன்முதலாக நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் நலனுக்காக சுமார் ரூ .1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது  தொடர்பான அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.

மக்கள் யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள் என்று கூறிய அமைச்சர் அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள்,  பெண்கள், மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நிவாரண உதவிகள் அறிவித்து உள்ளார்.

நிதி அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், மத்திய அரசு இன்று அறிவித்துள்ள நிதி உதவித் தொகுப்பு, அரசு  சரியான திசையில் செல்லுவதற்கான முதல் படியாகும். இந்தியா தனது விவசாயிகள், தினசரி ஊதியம் பெறுபவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு கடன்பட்டிருக்கிறது. இது தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் ஊரடங்கின் சுமைகளைத் தாங்கும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளாக மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல்காந்தி, நிதி அமைச்சரின் நடவடிக்கைகளையும் கடுமையாக சாடி வந்தார். ஆனால்,  இன்றைய கொரோனா தடுப்பு காரணமாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்துள்ள நிதி நிவாரண  அறிவிப்புக்கு வரவேற்பு முதன்முதலாக ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளது  வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Corona threat, Corona virus, coronavirusindia. home quarantine, Dhanapal, dmk, Edappadi palanisamy, EPS, hydroxychloroquine, Icmr, Janta Curfew, lackdown, Minister Vijayabaskar, Nirmala sitaraman, PM Modi, RahulGandhi, stalin, StayHomeStaySafe, stlain, tn assembly, TN Assembly. EPS. தனபால், அமைச்சர் விஜயபாஸ்கர், எடப்பாடி, கொரோனா, கொரோனா வைரஸ், தமிழ்நாடு சட்டமன்றம், நிர்மலா சீத்தாராமன், மக்கள் ஊரடங்கு, மோடி, ராகுல்காந்தி, லாக்டவுன், விழிப்புணர்வு உரை, ஸ்டாலின்
-=-