சூர்யா பிறந்தநாள் பரிசாக வரும் “காப்பான்” ஆடியோ ரிலீஸ்…!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’

கடந்த 14-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே போல ஜுலை 5-ம் தேதி வெளியான ‘சிரிக்கி’ என்ற பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாள் வரும் ஜூலை 23-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அவர் பிறந்தநாளுக்கு பரிகாக அளிக்க காப்பான் படத்தின் ஆடியோ ஜூலை 21-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி